TNPSC 2012 April - Current Affairs in tamil


சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 78 சதவீத ஓட்டுகள் பதிவாகின. (மார்ச் 18)

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் நிர்ப்பந்தத்தால் ரெயில்வே மந்திரி பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி விலகினார். பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவர் அனுப்பிவைத்தார். (மார்ச் 18)

ஒடிசா மாநிலத்தில் இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2 பேரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். அவர்களை விடுதலை செய்ய 13 நிபந்தனைகளை விதித்தனர். (மார்ச் 18)

தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிரான திருத்தத் தீர்மானம் பாராளுமன்ற ஓட்டெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. (மார்ச் 19)
-->
70 ரஷிய விஞ்ஞானிகள் உள்பட கூடங்குளம் அணுஉலைப் பணியாளர்கள் 1000 பேர் பணிக்குத் திரும்பினார்கள். முழு வீச்சில் பணிகள் நடைபெற்று, விரைவில் மின்சார உற்பத்தித் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. (மார்ச் 20)

ரெயில்வே துறை புதிய மந்திரியாக முகுல்ராய் பதவியேற்றார். (மார்ச் 20)

டெல்லி மேல்சபையிலும், தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான திருத்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. (மார்ச் 20)

சங்கரன்கோவில் சட்டசபை இடைத்தேர்தலில் 68 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் `டெபாசிட்' இழந்தனர். (மார்ச் 21)

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் ஓட்டளித்தன. (மார்ச் 22)

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 10.60 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தலைமைக் கணக்கு அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி மேல்-சபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. (மார்ச் 22)
-->
ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் திடீர் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக ராணுவத்தினர் அறிவித்தனர். (மார்ச் 22)

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். (மார்ச் 24)

அணு ஆயுதப் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் தென்கொரியா சென்றடைந்தார். (மார்ச் 24)
-->
PREVIOUS                                            NEXT

trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal, USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற