current affairs 2012 in tamil - சமீப கால நிகழ்வுகள் 2012 - Part-2

ஏப்ரல்

1. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். இ.கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் பலி.

1. மியான்மர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஆங் சாங் சூயி உள்பட அவரது ஐனநாயக கட்சியினர் 44 இடங்களில் வெற்றி பெற்றனர்.


4. மத்திய அரசுக்குத் தெரியாமல் தில்லியில் ராணுவம் குவிக்கப்பட்டதாக பரபரப்புச் செய்தி வெளியானது.

19. கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி - 5’ ஏவுகணை சோதனை வெற்றி.

21. சத்தீஸ்கரில் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர்.

26. மாநிலங்களவை எம்.பி.யாக சச்சின் தெண்டுல்கர் நியமனம்.

27. மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டார்.

28. போலி ஆயுத பேர ஊழல் வழக்கில் முன்னாள் பா.ஜ. தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு தில்லி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

மே

5. மதுரை ஆதீன மடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

13. நாடாளுமன்றத்தின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உரையாற்றினர்.

14. நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 12 இந்தியர்கள் பலி.

15. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 15 மாதங்கள் சிறையிலிருந்த ஆ. ராசாவுக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

22. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய அரசு மீது புதிய புகார் கூறப்பட்டது.

23. பெட்ரோல் விலை அதிரடியாக உயர்வு. லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தப்பட்டது.

24. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி.

27. ஐபிஎல் சீஸன் 5 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

30. விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் போட்டியில் போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி 5வது முறையாக சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

6. புதிய தலைமை தேர்தல் கமிஷனராக வி.எஸ். சம்பத் நியமனம்.

11. கர்நாடகத்தில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு அம்மாநில அரசு சீல் வைத்தது.

15. காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என சோனியா காந்தி அறிவிப்பு.

15. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் கார்த்திக் தொண்டைமான் (அதிமுக) வெற்றி.

19. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை, பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

20. ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கு ரூ 5 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. நீதிபதி பட்டாபி ராமாராவ் கைது.

21. பாகிஸ்தான் பிரதமராக பர்வேஸ் அஷ்ரப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

25. மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி தில்லியில் கைது.
-->
ஜூலை

1. யூரோ கால்பந்து போட்டியில் மூன்றாவது முறையாக ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.

4. நீச்சல் புயல் என அழைக்கப்பட்ட அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (ஒலிம்பிக்கில் இவர் இதுவரை 22 பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்).

18. தமிழக அமைச்சரவையில் இருந்த கே.ஏ.செங்கோட்டையின் பதவி பறிக்கப்பட்டு, தோப்பு வெங்கடாசலம் புதிய அமைச்சராக நியமனம்.

18. இந்திப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மரணம்.

22. ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி அபார வெற்றி.

23. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப்படையில் இருந்த கேப்டன் லட்சுமி செகல் மரணம்.

25 . இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி (வயது 76) பதவியேற்றுக் கொண்டார்.

25. தாம்பரம் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த 2-ஆம் வகுப்பு மாணவி ஸ்ருதி, தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார்.

27. லண்டனில் ஒலிம்பிக் 2012 போட்டிகள் துவங்கியது.

30. தில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலி.

ஆகஸ்ட்

12. தர்மபுரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 தேர்வு வினாத்தாளுடன் வந்தவர் கைது.

13. ஆறரை லட்சம் பேர் எழுதிய குரூப் - 2 தேர்வு ரத்து.

17. நிலக்கரி ஒதுக்கீடு உள்பட மூன்று திட்டங்களில் மத்திய அரசுக்கு ரூ. 3 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கையால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு.

17. அசாம் மாநிலக் கலவரம் தொடர்பாக வதந்திகள் பரவியதை அடுத்து தென்மாநிலங்களில் உள்ள அசாம் மாநிலத்தவர்கள் உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு திரும்பினர். இதனால், எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு கட்டுபாடு விதிக்கப்பட்டது.

18. சீனாவைச் சேர்ந்த வென் ஜியா உலக அழகியாக தேர்வு செயப்பட்டார்.

18. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வி.வி.எஸ். லட்சுமண் அறிவித்தார்

25. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றதில் 6.75 லட்சம் ஆசிரியர்களில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

26. முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் (வயது 82) மரணம்.

26. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸி. அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
முந்தைய பக்கம்                     அடுத்த பக்கம்


No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற