Current Affairs 2012 in tamil - முக்கிய நிகழ்வுகள் - 2012

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘புதிய தலைமுறை கல்வி’ வழங்கிய  பகுதி இது.

ஜனவரி

8. சென்னை ஓபன் டென்னிஸ், ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ், டிப்சரேவிச் (செர்பியா) இணை பட்டம் வென்றது.

10. தமிழகத்திற்கு ‘தானே’ புயல் நிவாரண நிதியாக ரூ. 500 கோடி ஒதுக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு.

11. முதல் அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் தொடக்கம்.

13. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து திடீர் ராஜினாமா.
-->
20. ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி நட்ராஜ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமனம்.

23. சென்னை பெருங்குடியில் உள்ள வங்கி ஒன்றில் பட்டப்பகலில் ரூ. 24 லட்சம் கொள்ளை.

26. தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டு, என்.ஆர்.சிவபதி, முக்கூர் என். சுப்பிரமணியன் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிப்ரவரி

1. சட்டசபையில் கையை நீட்டி ஆவேசமாகப் பேசிய விஜயகாந்த் உள்பட 10 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

2. கர்நாடக சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த லட்சுமணன் சவாதி, சி.சி.பட்டீல், கிருஷ்ணன் பாலேமர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

2. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்த போது, அவர் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஏலத்தின் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டது.

9. பாரிமுனை செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி (வயது 39), 9-ஆம் வகுப்பு மாணவனால் கொலை செய்யப்பட்டார்.

13. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் ரூ. 24.50 லட்சம் கோடி என சி.பி.ஐ. இயக்குனர் அமர் பிரதாப் தெரிவித்தார்.

15 .கொல்லம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர்கள், இத்தாலிய மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

15. சென்னை கீழ்கட்டளை அருகே உள்ள வங்கியில் பட்டப்பகலில் ரூ. 14 லட்சம் கொள்ளை போனது.

15. எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட ஜாம்பாவன்களுக்கெல்லாம் அம்மாவாகவும் 1,500 படங்களில் நடித்த பெருமை கொண்டவருமான பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்.

23. வேளச்சேரியில் பதுங்கியிருந்த வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

25. சென்னையில் இரண்டு மணி நேரம், பிற மாவட்டங்களில் நான்கு மணி நேரம் என தமிழகத்தில் மின்வெட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மார்ச்

3. இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமனம்.

4. பீகாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய மகளிர் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

5. தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி மாலுமிகளை சிறையிலடைக்க திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

5. ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் தேர்வு.

6. உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடித்தது. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. உத்தரகாண்டில் சுயேச்சை ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம்-பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

8. ஐ.நா. சபை மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கை போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

9. ‘இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்’ ராகுல் திராவிட் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

10. உ.பி. முதல்வராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் தேர்வு.

12. திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜில் பதுங்கியிருந்த தீவிரவாதி சுட்டுக் கொலை.

14. ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது. மம்தாவின் எதிர்ப்பால் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டது.

16. மத்திய பட்ஜெட் தாக்கல். 46 ஆயிரம் கோடிக்கு வரி விதிப்பு. வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

18. மம்தாவின் எதிர்ப்பால் மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா.

19. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

20. மத்திய ரயில்வே அமைச்சராக முகுல்ரா பதவியேற்பு.

21. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 10.60 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக தலைமை தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கை.

21. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முத்துச்செல்வி (அதிமுக) வெற்றி.

22. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

29. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை.

30. தமிழகத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.
-->

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற