current affairs 2012 - Part 3 சமீபகால நிகழ்வுகள் -3

செப்டம்பர்

4. அரசுப்பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

8. சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.


9. இந்தியாவின் 100-வது ராக்கெட்டான ‘பி.எஸ்.எல்.வி. - சி21’ வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

9. வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்க்கீஸ் குரியன் மரணம்.

10. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மீனவர் அந்தோணி ஜான் பலி.

13. டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது.

14. ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து டெக்கான் அணி நீக்கம்.

13. காந்தஹார் விமானக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாவத் என்ற மெஹ்ரஜீதீன், 13 ஆண்டுகளுக்குப்பின் ஸ்ரீநகரில் கைது.

14. சில்லறை வணிகத்தில் 51% நேரடி அந்நிய முதலீடு, சிலிண்டருக்கு கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு மத்திய அமைசரவை ஒப்புதல் அளித்தது.

17. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் தீக்குளித்து இறந்தார்.

18. டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணியிலிருந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் விலகியது.

20. தில்லியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இலங்கை அதிபர் ராஜபக்சே சந்திப்பு.

24. பிரபல மலையாள வில்லன் நடிகர் திலகன் மரணம்.

29. தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியிலிருந்து டி. ஜெயக்குமார் ராஜினாமா.
-->
அக்டோபர்

2. அன்னா ஹசாரே குழுவில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.

3. தமிழக அமைச்சராக இருந்த சி.வி. சண்முகத்தின் பதவி பறிக்கப்பட்டது. புதிய அமைச்சராக ப. மோகன் நியமனம்.

7. சர்வதேச 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

9. பாகிஸ்தான் தீவிரவாதிகளால் பள்ளிச் சிறுமி மலாலா சுடப்பட்டாள்.

10. தமிழக சட்டசபை சபாநாயகராக தனபால் பதவி ஏற்பு.

12. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டது.

15. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

19. இளைய ஆதீனப் பதவியிலிருந்து நித்யானந்தா நீக்கம்.

26. மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

27. தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு.

27. மத்திய அமைச்சரைவை மாற்றி அமைக்கப்பட்டது. புதுமுகங்கள் 22 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

31. நீலம் புயலால் சென்னை கடற்கரையில் பிரதீபா காவேரி கப்பல் கரை தட்டியது. இதிலிருந்து தப்ப முயன்ற 6 பேர் பலி.

முந்தை பக்கம்                              அடுத்த பக்கம்
-->
பதிவிறக்கம் செய்ய அடுத்த பக்கத்திற்கு செல்லவும்

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற