செல்லின் அமைப்பு


 • உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்
 • நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்
 • செல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665
  செல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்
 • செல்லுலா எனும் இலத்தீன் மொழி சொல்லுக்கு - ஒரு சிறிய அறை என்று பெயர்.
 • செல்களை எதன் உதவிக்கொண்டு காணமுடியும் - நுண்ணோக்கி (Microscope)
 • செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.
 • செல்லின் உட்கருவையும், செல்லுக்குள்ளே தனி உலகம் இருப்பதையும் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
 • எதை சாப்பிடுவதற்கு முன்னும் அதை நுண்ணோக்கியில் பார்த்த பிறகே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் - இராபர்ட் பிரெளன்.
 • இராபர்ட் பிரெளன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி.
 • தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் - புரொகேரியாடிக் செல் (எளிமையான செல்) என அழைப்பர்.
 • செல்லின் வெளிச்சுவர், உட்கரு உட்பட நுண்ணுறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்லிற்கு - யூகேரியாட்டிக்செல்(முழுமையான செல்) என்று பெயர்.
 • மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 6,50,00,00 செல்கள்.
 • கணிகங்கள் இல்லாத செல் - விலங்குசெல்
 • தாவரசெல்லுக்கே உரிய நுண் உறுப்பு - கணிகம்.
 • புரோட்டோ என்றால் - முதன்மை என்று பொருள்
 • பிளாஸ்மா என்றால் - கூழ் போன்ற அமைப்பு என்று பொருள்.
 • பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
 • சைட்டோபிளாசம், உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது - புரோட்டோபிளாசம்.
 • பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி - சைட்டோபிளாசம்.
 • செல்லின் உட்கருவைப் பாதுகாப்பதும், அது சொல்லும் வேலையை தடங்கல் இல்லாமல் செய்வது - சைட்டோபிளாசம்.
 • உட்கருவின் வடிவம் - கோளவடிவம்.
 • உடல் வடிவத்தை தீர்மானிப்பது - உட்கரு (நியூக்ளியஸ்)
 • ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது - உட்கரு.
 • செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியாவிடம் உள்ளது.
 • தாவர, விலங்கு செல்கள் எந்த வகையை சார்ந்த செல் - யூகேரியாட்டிக்செல்
 • பாக்டீரியா - புரோகேரியாடிக்செல் வகையை சார்ந்தது.
 • விலங்கு செல்லில் மட்டுமே இருப்பவை - சென்ட்ரோசோம்
 • விலங்கு செல்லை சுற்றியுள்ள படலத்திற்கு பெயர் - பிளாஸ்மா
 • செல்லுக்கு வடிவம் கொடுப்பது - பிளாஸ்மா
 • புதிய செல்களை உருவாக்குவது - சென்ட்ரோசோம்.
 • விலங்குகளைவிடத் தாவரம் இருகி இருப்பதற்குக் காரணம் - தாவரங்களின் செல்சுவர் அமைப்பு
 • செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை - செல்சுவர்
 • செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது - செல்சுவர்
 • சத்து நீரை சேமிப்பதும், செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவதும் நுண்குமிழ்கள் வேலை.
 • தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை.
 • செல்லின் ஆற்றலின் மையம் - மைட்டோகாண்ட்ரியா
 • சென்ட்ரோசோம் என்னும் நுண்ணுறுப்பு - தாவர செல்லில் இல்லை.
 • தற்கொலைப்பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு - லைசோசோம்கள்
 • செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு (நியூக்ளியஸ்)
 • செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் கோள வடிவம் கொண்ட நுண்ணுறுப்பு - உட்கரு.
 • செல்லுக்குள் நுழையும் நுண் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு - லைசோசோம்.
 • மிகவும் நீளமான செல் - நரம்பு செல்
 • நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் - வெங்காயத்தோலின் செல்.
 • புரதத்தை உற்பத்தி செய்வது - ரிபோசோம்கள்.
 • செல்லின் புரதத் தொழிற்சாலை - ரிபோசோம்கள்.
 • செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
 • உண்ணும் உணவிலிருந்து புரதச்சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும், நம் உடலுக்கும் வலு சேர்ப்பது - கோல்கை உறுப்புகள்.
 • உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பது - கோல்கை உறுப்புகளின் வேலை.
 • புரோட்டாபிளாசத்திற்கு பெயர் இட்டவர் - ஜெ.இ.பர்கின்ஜி
 • எலும்புகள் - ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனது.
 • இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்று உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் - ஆண்டவன் வான் லூவன்ஹாக் (1675)

5 comments :

 1. it is very useful for tnpsc exam

  ReplyDelete
 2. It is really useful ,if it is history or polity, it will be ok for english medium student to study in tamil...but when coming to science we need the material in english ..Still great effort keep doing and even consider my comment too....Arrange an weekend online Exam monthly once ,thank u.

  ReplyDelete
 3. ITS REALLY HELPFUL FOR TNPSC STUDENTS.

  ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற