தமிழில் வழங்கப்படும் பருவப்பெயர்களின் தொகுப்பு

ஆண்களின் பருவப்பெயர்கள் :

பாலன் -7 வயதிற்குக்கீழ்
மீளி -10 வயதிற்குக்கீழ்
மறவோன் -14 வயதிற்குக்கீழ்திறலோன் -14 வயதிற்கும்மேல்
காளை -18 வயதிற்குக்கீழ்
விடலை -30 வயதிற்குக்கீழ்
முதுமகன் -30 வயதிற்கும்மேல்

பெண்களின் பருவப்பெயர்கள் :

பேதை : 5-7 வயது
பெதும்பை : 07 - 11 வயது
மங்கை : 11 - 13 வயது
மடந்தை : 13 - 19 வயது
அரிவை : 19 - 25 வயது
தெரிவை : 25 - 31 வயது
பேரிளம்பெண் : 31 - 40 வயது

இலைகளின் பருவப்பெயர்கள் :

கொழுந்து - குழந்தைப்பருவம்
தளிர் - இளமைப்பருவம்
இலை - காதற்பருவம்
பழுப்பு - முதுமைப்பருவம்
சருகு - இறுதிப்பருவம்

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை - நனை முத்தாகும் நிலை
மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் - மலரும் பூ
பூ - பூத்த மலர்
வீ - உதிரும் பூ
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற