டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் - பயண இலக்கிய நூல்கள்

Group 2, Group 2A, VAO, Group 4 General Tamil Study Material
 பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். பயண இலக்கியமாகக் கொள்ளத்தக்க பழந்தமிழ் இலக்கியம் ஆற்றுப்படை நூல்கள்.

தமிழின் முதல் பயண இலக்கியம் 1832இல் ஏனுகுல வீராசாமி ஐயரால் எழுதப்பட்ட காசி யாத்திரை.

பயண இலக்கிய முன்னோடி ஏ.கே. செட்டியார்
பயண இலக்கியப் பெருவேந்தர் சோமலெ
பயணம் என்பதற்குச் செலவு என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் திரு.வி.க.

புகழ்பெற்ற பயண இலக்கியங்கள்:

திவ்விய தேச யாத்திரை -  சேலம் பகடலு நரசிம்மலு நாயுடு
எனது இலங்கைச் செலவு - திரு.வி.க.
யான் கண்ட இலங்கை - மு.வ.

பயண இலக்கியத்தின் முன்னோடி அ. க. செட்டியார்

அ.க.செட்டியார் (நவம்பர் 3, 1911 - செப்டம்பர் 10, 1983) தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர்.
திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் கருப்பன். தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு Photographical Institute இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற

 

TNPSC STUDY MATERIALS